நாளை முதல் ரோன்97, மானியமில்லா ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
ரோன்97 லிட்டருக்கு 5 ரிங்கிட் ஆகவும், மானியமில்லா ரோன்95 லிட்டருக்கு 4 ரிங்கிட் 52 சென்னாகவும், தலா 5 சென் குறைக்கப்பட்டுள்ளது.
மானியமில்லா டீசல் விலை 15 சென் குறைந்து லிட்டருக்கு 5 ரிங்கிட் 27 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புடி95 திட்டத்தின் கீழ் ரோன்95 லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென்னாகவும், புடி டீசல் திட்டத்தின் கீழ் டீசல் 2 ரிங்கிட் 10 சென்னாகவும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.
புதிய விலைகள் அக்டோபர் 7 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.








