ஷா ஆலாம், அக்டோபர்.06-
சட்டவிரோத வட்டி முதலைகளின் விவகாரத்தைக் கையாளுவதில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு போலீஸ்காரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத வட்டி முதலைகள் தொடர்பில் புகார்தாரரின் பிரச்னையைக் கவனிப்பதில் இருவரும் முறைகேடு புரிந்துள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் அவ்விரு போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.








