Dec 4, 2025
Thisaigal NewsYouTube
3 தொழில்துறைகளில் அந்நியத் தொழிலாளர்களுக்கான ஆள் எடுப்பு,அக்டோபர் 10 ஆம் தேதி திறக்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

3 தொழில்துறைகளில் அந்நியத் தொழிலாளர்களுக்கான ஆள் எடுப்பு,அக்டோபர் 10 ஆம் தேதி திறக்கப்படுகிறது

Share:

இந்தியர்களின் 3 பாரம்பரியத் தொழில்துறைகளில் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வதற்கு வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் என்று மனித வள அமைச்சர வி. சிவகுமார் அறிவித்துள்ளார்.

முடித்திருத்தும் நிலையங்கள், ஜவுளியகம் மற்றும் பொற்கொல்லர் நகைக்கடைகள் ஆகிய மூன்று துறைகளில் அந்நியத் தொழிலாளர்களை எடுப்பதற்கான அனுமதி, கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் முடக்கப்பட்டு இருந்த நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு அத்துறைகள் அந்நியத் தொழிலாளர்களுக்கு மீண்டும் திறக்கப்படுவதாக கடந்த மாதம் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த மூன்று துறைகளிலும் 7 ஆயிரத்து 500 அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதற்கு கடந்த செப்டம்பர் 8 ஆ ம் தேதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக சிவகுமார் குறிப்பிட்டார்.

இந்த 7,500 அந்நியத் தொழிலாளர்கள் எண்ணிக்கை என்பது, குடிநுழைவுத்துறையின் பதிவின் படி தற்போது வேலை செய்து வருகின்ற 5 ஆயிரம் வெள்ளி அந்நியத் தொழிலாளர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் விளக்கினார்.

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள விண்ணப்பிக்கும் முதலாளிமார்கள், தாங்கள் சார்ந்த தொழில்துறை வர்த்தக சங்கத்தில் உறுப்பினராக இடம் பெற்று இருக்க வேண்டும். அத்துடன் 7,500 தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தியப் பின்னர் அவர்களின் சேவைக்காலத்திற்கான காலக்கேடு நீட்டிக்கப்படாது ஆகியவை அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகளில் அடங்கும் என்று அமைச்சர் சிவகுமார் விளக்கினார்.

Related News