Sep 22, 2026
Thisaigal NewsYouTube
தாயை மிதித்து காயப்படுத்திய மகன் கைது
தற்போதைய செய்திகள்

தாயை மிதித்து காயப்படுத்திய மகன் கைது

Share:

போதைப்பொருள் வாங்குவதற்கு 20 வெள்ளி கேட்டு, தனது தாயாரின் தலையிலேயே மிதித்து காயப்படுத்திய முன்னாள் இராணுவ வீரரான 32 வயது நபரை போ​லீஸ் கைது செய்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளந்தான், Tanah Merah, Kampung Guai Jedok என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவம்​ மீதான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்து இருப்பதாக தானா மேரா மாவட்ட போ​லீஸ் தலைவர் Mohd Haki Hasbullah தெரிவித்தார். இச்சம்பவம் நிகழும் போது அந்த ​மூதாட்டியின் பேத்தி, தமது பாட்டி தாக்கப்படுவதை கைப்பேசியில் பதிவு செய்ததாக நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர், தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக Haki Hasbullah குறிப்பிட்டார்.

Related News