Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஹாசனின் கருத்து, அம்னோவை பிரதிநிதிக்கவில்லை! ஜாஹித் ஹமிடி விளக்கம்
தற்போதைய செய்திகள்

ஹாசனின் கருத்து, அம்னோவை பிரதிநிதிக்கவில்லை! ஜாஹித் ஹமிடி விளக்கம்

Share:

MALAYSIA AIRPORT HOLDINGS BERHAD - MAHB நிறுவனத்தின் பங்குகளை, GLOBAL INFRASTRUCTURE PARTNERS - GIP நிறுவனம் கொள்முதல் செய்வதற்கு வழிவிடக்கூடாது என அம்னோ-வின் அனைத்து அமைச்சர்களும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக, அக்கட்சியின் துணைத்தலைவர் டத்தோ செரி முகமது ஹசன் முன்வைத்திருந்த கூற்று அவரது தனிப்பட்ட கருத்தாகும்.

அக்கருத்து கட்சியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்றும் முகமது ஹசன் உடனான சந்திப்பில், அதனை தாம் உறுதிபடுத்தியதாகவும் அம்னோ தலைவர் டத்தோ செரி அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.

MAHB நிறுவனத்தை GIP நிறுவனத்திற்கு விற்பதில், பிரதமர் டத்தூஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கொண்டுள்ள நிலைப்பாட்டை, அம்னோ-வும் கொண்டுள்ளதாகவும் துணைப்பிரதமருமான அவர் கூறினார்.

இஸ்ரேலுக்கு ஆயுதத்தை தருவிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள BLACKROCK நிறுவனம், GIP நிறுவனத்தை கொள்முதல் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், MAHB நிறுவனத்தின் பங்குகளை, GIP நிறுவனம் கொள்முதல் செய்யவுள்ள விவகாரம், நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சர்ச்சைகள் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை பதிலளித்திருந்த GIP நிறுவனம், MAHB நிறுவன விவகாரத்தில், BLACKROCK நிறுவனம் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என விளக்கம் அளித்திருந்தது.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்