Apr 11, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் எரிபொருள் மானியம் மோசடி தடுப்பு நடவடிக்கை – மலேசியக் கடற்படையின் உதவி கோருகிறது அமைச்சு
தற்போதைய செய்திகள்

சபாவில் எரிபொருள் மானியம் மோசடி தடுப்பு நடவடிக்கை – மலேசியக் கடற்படையின் உதவி கோருகிறது அமைச்சு

Share:

சபா மாநிலத்தில் எரிபொருள் மானிய மோசடி மற்றும் கடத்தல் செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்த, உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சான KPDN, மலேசிய கடற்படையின் வசதிகளை பயன்படுத்த கோரிக்கை வைத்துள்ளது.

கடலோர மற்றும் எல்லைப் பகுதிகளில் நடைபெறும் பெட்ரோல், டீசல் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் கடத்தல் மற்றும் தவறான பயன்பாட்டை தடுப்பதில் இந்த முயற்சி முக்கிய பங்காற்றும் என சபா மாநில KPDN இயக்குநர் ஷாரில் நிசாம் ஷாஹிடின் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஒத்துழைப்பு மூலம் KPDN மற்றும் மலேசிய கடற்படை இடையே தகவல் பகிர்வு, நடவடிக்கை ஒருங்கிணைப்பு ஆகியவை வலுப்பெற்று, அரசின் மானிய மோசடிகளை ஒருங்கிணைந்த முறையில் தடுக்கும் திறன் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதன் மூலம் வழங்கல் பாதுகாப்பும் சந்தை நிலைத்தன்மையும் உறுதி செய்யப்படும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ஷாரில் நிசாம் இத்தகவலை நேற்று கிழக்கு கடற்படை துணை தளபதி எர்மான் ஷாரில் அத்லான் -ஐ மரியாதை நிமித்தமாக சந்தித்த பிறகு, வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News