Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ஆடவரை சுட்டுக்கொன்றது மூலம் கடத்தப்பட்ட நபர் மீட்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆடவரை சுட்டுக்கொன்றது மூலம் கடத்தப்பட்ட நபர் மீட்பு

ரவாங்,செப்டம்பர் 26-

26 குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆடவர் ஒருவர், நேற்று அதிகாலையில் ரவாங், கம்போங் பாரு குண்டாங்-கில் சுட்டுக்கொல்லப்பட்டது மூலம் அந்த நபர் உட்பட அவரின் இரண்டு நண்பர்களால் கடத்திச் செல்லப்பட்ட ஓர் அந்நிய ஆடவரை போலீசார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பேர்வழிகளால் 45 வயதுடைய ஓர் இந்தோனேசியர், செராஸ், சலாக் தெற்கு பகுதியில் கடத்தப்பட்டுள்ளார். அந்த இந்தோனேசியர் கடத்தப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடத்தல்காரர்களின் வாகனத்தை நோக்கி போலீசார் பின் தொடர்ந்து சென்றதாக டத்தோ உசேன் உமர் கான் விளக்கினார்.

அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த நபர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

போலீசாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள அந்த இந்தோனேசியர், இது குறித்து செராஸ் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக அவர் தெரி வித்தார்.

சுட்டுக்கொல்லப்பட்ட 37 வயது நபர், காஜாங்கை பூர்வீகமாக கொண்டவர். அவர் ரவாங் அருகில் சுங்கை சோ - வில் (சுங்கை சோவில் ) வசித்து வந்ததாக நம்பப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்