Jul 1, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோ சிறையிலிருந்து பாகிஸ்தான் கைதி தப்பியோட்டம் - தேடுதல் வேட்டை தீவிரம்
தற்போதைய செய்திகள்

சுங்கை பூலோ சிறையிலிருந்து பாகிஸ்தான் கைதி தப்பியோட்டம் - தேடுதல் வேட்டை தீவிரம்

Share:

நேற்று சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பியோடிய பாகிஸ்தான் நாட்டு பிணைக் கைதியை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

24 வயதான முஹம்மது ஹசன் மீது கொள்ளை, சிறார் பாலியல் குற்றங்கள் மற்றும் குடிநுழைவு தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சந்தேக நபர் கடைசியாக ஆரஞ்சு நிற டி-ஷர்ட் மற்றும் நீளமான கருப்பு பேன்ட் அணிந்திருந்ததாக சுங்கை புலோ போலீஸ் தலைவர் ஹபீஸ் முகமது நோர் தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய சந்தேக நபரின் நகர்வுகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட வழக்கு அவர் மீது இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News