May 6, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது
தற்போதைய செய்திகள்

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.23-

வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் சாதகமான வருடாந்திர கண்ணோட்டத்தின் மதிப்பீடுகளுக்கு மத்தியில், அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 4 ரிங்கிட் என்ற நிலையைத் தாண்டி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2.19 மணி நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 3.9992 ஆக வர்த்தகமாகி புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ரிங்கிட் சுமார் 1.5 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ள நிலையில், இன்று 4 ரிங்கிட் என்ற வலுவான தடையை உடைத்து 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டு இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா, தனது OPR வட்டி விகிதத்தை 2.75 விழுக்காட்டிலிருந்து மாறாமல் வைத்துள்ளது. இது சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைந்ததுடன், விலை நிலைத்தன்மைக்கு மத்தியில் நாணயக் கொள்கை நிலையை உறுதிப்படுத்த உதவியது.

மலேசியாவின் முன்னணி நிதிச் சேவை குழுமமான Kenanga Research ஆய்வின்படி, அமெரிக்க டாலர் குறியீடு 99.0 புள்ளிகளுக்குக் கீழே சரிந்ததால் ரிங்கிட் மேலும் வலுடைந்துள்ளது. ஜப்பானிய அரசாங்கப் பத்திரங்களில் அதிகரித்த ஏற்ற இறக்கம் மற்றும் ஐரோப்பிய முதலீட்டாளர்கள் அமெரிக்க கருவூலப் பத்திரங்களை வைத்திருப்பதை குறைக்கலாம் என்ற கவலைகள் காரணமாக அமெரிக்க டாலர் பலவீனமடைந்ததுள்ளது என்று அந்த நிதிச் சேவை குழுமம் கூறுகிறது.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்