Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ISKCON படகுத் திருவிழாவும் கீதா ஜெயந்தி தொடக்க விழாவும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ISKCON படகுத் திருவிழாவும் கீதா ஜெயந்தி தொடக்க விழாவும்

டிச. 8-

கோலாலம்பூரில் உள்ள Sri Jagannatha Mandirரில் நடைபெற்ற வண்ணமயமான படகு திருவிழா, கீதா ஜெயந்தி தொடக்க விழா, தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு மிக கோலாகலமாக நடந்தேறியது. இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்தார் டத்தோ சிவகுமார்.

பகவத்கீதையின் போதனைகளைப் பாதுகாப்பதில் ISKCONனின் அர்ப்பணிப்பை டத்தோ சிவகுமார் தனது உரையில் பாராட்டினார். நவீன சவால்களை எதிர்கொள்ளவும் ஆன்மீக வளர்ச்சியை வளர்க்கவும் இவை முக்கியமானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய அர்த்தமுள்ள, இணக்கமான நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக ISKCONஐ டத்தோ சிவக்குமார் வாழ்த்தினார். அதே சமயம், 250 பகவத்கீதை புத்தகங்களை அத்தோ சிவக்குமார் இலவசமாக வழங்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →