Mar 17, 2026
Thisaigal NewsYouTube
ஸ்னூக்கர் மேஜை, பிங் பாங் பந்து வாங்க வெ. 13,000 ஊழல்
தற்போதைய செய்திகள்

ஸ்னூக்கர் மேஜை, பிங் பாங் பந்து வாங்க வெ. 13,000 ஊழல்

Share:

பினாங்கில் அரசுத் துறையை சேர்ந்த பொறியாளர் ஒருவர் 13,000 வெள்ளி லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக பினாங்கு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அவரை கைது செய்துள்ளது.

நேற்று மாலை 5 மணியளவில் 30 வயதுடைய சந்தேகிக்கும் அந்நபர் பினாங்கு SPRM அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த போது கைது செய்யப்பட்டார்.

சம்பந்தப்பட்ட நபர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி அரசு துறையில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகின்ற ஒப்பந்ததாரரிடம் இருந்து குறிப்பிடப்பட்ட தொகையை பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.

சந்தேகிக்கும் அந்நபர் கடந்த 2022 ஆம் ஆண்டில் இக்குற்றத்தை புரிந்திருப்பதுடன் தமது அலுவலகத்தினுள் வைப்பதற்காக ஒரு ஸ்னூக்கர் மேஜை, பிங் பாங் பந்துகள் வாங்குவதற்கு லஞ்சம் பெற்றிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News