Jan 19, 2026
Thisaigal NewsYouTube
மாநில அரசாங்கத்திற்குச் சவால் விடுவதா?
தற்போதைய செய்திகள்

மாநில அரசாங்கத்திற்குச் சவால் விடுவதா?

Share:

ஹரி ராயா பெருநாளையொட்டி, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில், மலேசிய மடானி திறந்த இல்ல பொது உபசரிப்பு 6 மாநிலங்களில் நடத்தப்படுவது, வரம்பு மீறியது என்பதுடன், சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்திற்குப் புத்ராஜெயா சவால் விடுவதற்கு ஒப்பாகும் என்று பெரிக்காத்தான் நேஷனல் துணைப் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹஸ்சான் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கத்தின் பொது உபசரிப்பை, மாநில அளவில் நடத்தப்படுவது துரதிர்ஷ்டமானதாகும். காரணம், இது மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் இடையிலான நல்லுறவை கட்டமைக்காது என்பதுடன் அதனால் பயன் ஏதும் இல்லை என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான தக்கியுடின் ஹஸ்சான் குறிப்பிட்டார்.

Related News