தமது வங்கிக் கணக்கில் தமக்கே தெரியாமல் 400 மில்லியன் வெள்ளி எப்படி வந்தது எனத் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார் பெண்மணி ஒருவர்.
பணம் வரவாக இருந்தாலும், அஃது அவருக்கு சாதகமாக இல்லாமல், பாதமாக அமையும் என அவர் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
அந்தப் பணம் தமது வங்கிக் கணக்கிற்கு வந்த பிறகு, அது முடக்கப்பட்டதாகத் தெரிவித்த அதன் உரிமையாளர் ஹஃபிட்சா அப்துல்லா , அதனை மீண்டும் பெற பெரும் அவதியைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதோடு, அந்தப் பெண்ணின் நிறுவனத்தின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது என Linkedin வலைத்தளத்தில் அவர் தெரிவித்தார்.
எனவே, மேய்பேங்க் வங்கியைத் தொடர்பு கொண்டும், நாள்தோறும் அதன் கிளைக்கு நேரடியாகச் சென்றும் காலம் விரயமானதாக அந்தப் பெண் கூறினார்.
தமது பதிவு அந்த வக்கியின் துணைத் தலைமைச் செயல்முறை அதிகாரியின் கவனத்திற்குச் சென்றதோடு அந்த விவகாரம் தீர்க்கப்பட்டு விட்டதாக சிங்கப்பூர் ஆங்கில நாளேடு The Straits Times செய்தி வெளியிட்டிருந்தது.








