மலேசிய மக்களின் சராசரி வருமானம் அடுத்த ஆண்டில் 5.1 விழுக்கடாக உயரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வானது, ஆசியானில் அடுத்த ஆண்டில் உயர்வு காணலாம் என்று எதிர்பார்க்கப்படும் 5.2 விழுக்காடு சம்பள உயர்வுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவாக இருக்கும் என்று சம்பள ஆய்வு நிறுவனமான மெர்செர்ஸ் கூறுகிறது.
இந்த சம்பள அதிகரிப்பானது, இந்த பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி விகிதங்களுக்கு இடையிலான மாறுப்பட்ட சம்பள முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது என்று அந்த நிறுவனம் கூறுகிறது.
அடுத்த ஆண்டின் அதிகபட்ச சராசரி சம்பள உயர்வானது இந்தியாவில் 9.3 விழுக்காடாகவும், வியட்நாமில் 7 விழுக்காடாகவும், இந்தோனேசியாவில் 6.5 விழுக்காடாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த ஆய்வு நிறுவனம் கூறுகிறது.







