Oct 17, 2026
Thisaigal NewsYouTube

கேமரன்மலையில் மீண்டும் நிலச்சரிவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேமரன்மலையில் மீண்டும் நிலச்சரிவு

கேமரன்மலை, நவ. 13-


கேமரன்மலையில் மீண்டும் நிலச்சரிவு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தானா ராத்தா – ரிங்லெட் சாலையின் 54 ஆவது கிலோ மீட்டரில் இன்று மாலை 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

சாலையோர மலைச்சாரலில் மரங்களை வேரோடு பெயர்த்துக்கொண்டு நிகழ்ந்த இந்த நிலச்சரிவில் எந்தவொரு உயிருடன் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு சம்பவத்தை கேமரன் மலை மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்ரி ரம்லி உறுதிப்படுத்தியுள்ளார்.

சாலையில் மலைப்போல் குவிந்துள்ள மண்ணையும் பாறைகளையும் அகற்றும் பணியில் பொதுப்பணி இலாகா ஈடுபட்டுள்ள வேளையில் வானங்களுக்கு அந்த சாலை தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →