அம்பாங், அக்டோபர்.19-
அம்பாங் ஜெயா, பண்டான் இண்டாவில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், ஒருவர் வரிசையைத் தாண்டிச் சென்றதாகக் கூறி, லாரி ஓட்டுநர் ஒருவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், அந்நபர் காயமடைந்தார். மாலை 5.15 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தின் போது, தன்னைத் தாக்கிய சந்தேக நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்நபருக்கு மூக்கு, இடது கை, தலையின் பின்பகுதியில் வீக்கமும் காயங்களும் ஏற்பட்டதாக A
அம்பாங் ஜெயா மாவட்ட காவற்படைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார். லாரி ஓட்டுநர் அடையாளம் தெரியாத கூர்மையான சிவப்பு நிறப் பொருளைக் கொண்டு தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், சண்டையை விலக்கி விட்டுத் தப்பியோடிய அந்தச் சந்தேக நபரைப் காவற்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.