ஜோகூர் பாரு, அக்டோபர்.02-
ஜோகூர் பாருவில் உள்ள தையல் கடைகள், உலோகக் கடைகள், உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை இலக்காகக் கொண்டு குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையில் 60 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சோதனை நேற்று காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை வரை நடைபெற்றதாக குடிநுழைவுத்துறை தெரிவித்தது. சம்பந்தப்பட்ட அந்நிய நாட்டவர்கள் தங்களின் பயண ஆவணங்கள் மற்றும் வேலை பெர்மிட் முதலியவற்றைக் காட்டத் தவறியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக மாநில குடிநுழைவு இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார்.








