Nov 17, 2025
Thisaigal NewsYouTube
எல்ஆர்டி 3 டிசம்பர் 31 ஆம் தேதி சேவையைத் தொடங்குகிறது
தற்போதைய செய்திகள்

எல்ஆர்டி 3 டிசம்பர் 31 ஆம் தேதி சேவையைத் தொடங்குகிறது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.17-

ஷா ஆலாமையும், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளையும் இணைக்கும் எல்ஆர்டி 3 ரயில் சேவை வரும் டிசம்பர் 31 ஆம் தேதி தொடங்குகிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

எல்ஆர்டி 3 ரயில் போக்குவரத்தின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்காக இத்திட்டம், தற்போது இறுதிக் கட்டச் சோதனை மற்றும் செயல்பாட்டில் உள்ளதாக அந்தோணி லோக் கூறினார்.

வெள்ளோட்டத்திற்கான தேதியை உறுதிச் செய்வதற்கு முன்பு, போக்குவரத்து அமைச்சு, Prasarana Malaysia Berhad- அதிகாரிகள் இணைந்து பாதுகாப்பு அம்சங்கள், செயல்பாட்டின் நம்பகத்தன்மை மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுக்கு முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எல்ஆர்டி 3 ரயில் சேவை தொடங்கிய பின்னர் தொழில்நுட்பத்தில் எந்தவோர் இடையூறும் இருக்கக்கூடாது என்பதே இந்த பரீட்சார்ந்த சோதனையின் நோக்கமாகும் என்று அந்தோணி லோக் விளக்கினார்.

Related News