மதுபானம் விற்பனை செய்யும் வசதியுள்ள கடைகளில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்கள், மதுபானங்களை விற்பனை செய்வதிலிருந்து விலக்கு அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சமய விவகாரங்களுக்கான அமைச்சர் ஸுல்கிஃப்லி ஹசான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், இந்த விவகாரத்தைத் தீர்ப்பதற்காக ஏற்கெனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் வணிக உரிம நிபந்தனைகளை ஊராட்சி மன்றங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான ஜாகிம் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக கோலாலம்பூர் மாநகர் மன்றம், ஊராட்சி துறை, தொழிலாளர் துறை, சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மற்றும் மனிதவள அமைச்சு ஆகியவற்றுடன் ஜாகிம் ஆலோசனை நடத்தியுள்ளது.
ஹலால் மற்றும் ஹலால் அல்லாத பொருட்களை ஒரே கடையில் விற்பனை செய்யும் கடைகளில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்களை உள்ளடக்கியதாக இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








