Nov 12, 2026
Thisaigal NewsYouTube

பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 130 மலேசியர்கள்! விசாரணைக்காக புக்கிட் அமான் போலீஸ் குழு விரைகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 130 மலேசியர்கள்! விசாரணைக்காக புக்கிட் அமான் போலீஸ் குழு விரைகிறது

பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் கடந்த மாதம் தடுத்து வைக்கப்பட்ட 130 மலேசியர்கள் தொடர்பாக மேலதிகத் தகவல்களைத் திரட்ட புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் போலீஸ் குழு விரைவில் பாகிஸ்தான் செல்லவுள்ளது.

அங்கு பாகிஸ்தான் அதிகாரிகளைச் சந்தித்து வாக்குமூலங்களைப் பதிவு செய்வதுடன், சைபர் மோசடி மையத்தில் கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களையும் ஆய்வு செய்யவுள்ளதாக அதன் இயக்குநர் ருஸ்டி இசா தெரிவித்தார்.

மோசடிக் கும்பல் மலேசிய போலீஸ் சீருடைகளைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றிய விதம் உள்ளிட்ட செயல்பாடுகளைக் கண்டறிவதே இந்த விசாரணையின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 59 பேர் சபாவையும், 57 பேர் சரவாக்கையும் சேர்ந்தவர்கள். ஏனையோர் ஜொகூர், சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் கிளந்தானைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 92 பேருக்கு மலேசியாவில் குற்றப் பதிவுகள் இல்லை என்றும், 107 பேர் பாகிஸ்தானில் விசா காலத்தைத் தாண்டித் தங்கியிருந்ததாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மலேசியர்களைக் குறிவைத்து நிதி மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இந்தக் கும்பல், வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மலேசியாவில் பல பில்லியன் டாலர் முதலீடுகள்! வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிப்பு – துணை அமைச்சர் சியூ சூன் மான்

மலேசியாவில் பல பில்லியன் டாலர் முதலீடுகள்! வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிப்பு – துணை அமைச்சர் சியூ சூன் மான்

பாராங் வெட்டுத் தாக்குதலில் துண்டிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியின் கை மீண்டும் பொருத்தம்! எட்டு மணி நேர அறுவை சிகிச்சை வெற்றி

பாராங் வெட்டுத் தாக்குதலில் துண்டிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியின் கை மீண்டும் பொருத்தம்! எட்டு மணி நேர அறுவை சிகிச்சை வெற்றி

95 மில்லியன் ரிங்கிட் சாலைப் பராமரிப்புத் திட்டம்! 3 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக முன்னாள் ஜிஎல்சி ஊழியர் சந்தேகம்

95 மில்லியன் ரிங்கிட் சாலைப் பராமரிப்புத் திட்டம்! 3 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக முன்னாள் ஜிஎல்சி ஊழியர் சந்தேகம்

நஜிப் வீட்டுக் காவலுக்கு கூடுதல் செலவு இல்லை – உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன்

நஜிப் வீட்டுக் காவலுக்கு கூடுதல் செலவு இல்லை – உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன்

மாத வருமானம் 4,000 ரிங்கிட்டை எட்டினால் ஜி.எஸ்.டி. வரி குறித்து பரிசீலிக்கலாம் – பிரதமர் அன்வார்

மாத வருமானம் 4,000 ரிங்கிட்டை எட்டினால் ஜி.எஸ்.டி. வரி குறித்து பரிசீலிக்கலாம் – பிரதமர் அன்வார்

பாரிசான் நேஷனல் அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை – அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்

பாரிசான் நேஷனல் அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை – அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்