Nov 12, 2026
Thisaigal NewsYouTube

நஜிப் வீட்டுக் காவலுக்கு கூடுதல் செலவு இல்லை – உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப் வீட்டுக் காவலுக்கு கூடுதல் செலவு இல்லை – உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன்

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அரசாங்கம் கூடுதல் செலவு எதையும் ஏற்கவில்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

முன்பு காஜாங் சிறையில் பணியாற்றிய சிறை அதிகாரிகள் தற்போது நஜிப்பின் இல்லத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், போலீஸ் பாதுகாப்பும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பணியமைப்பின்படியே தொடர்வதாகவும் அவர் விளக்கினார்.

ஒவ்வொரு பணிச் சுழற்சியிலும் மூன்று சிறை அதிகாரிகள் வீதம், நாளொன்றுக்கு மூன்று பணிச் சுழற்சிகளில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், நஜிப்புக்கு மற்ற கைதிகளைக் காட்டிலும் தனிச்சலுகை வழங்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் விளக்கினார்.

மேலும், குற்றவாளிகள் எவராக இருந்தாலும் மன்னிப்புக் கோருவதற்கு சம உரிமை உண்டு என்றும், மன்னிப்பு வழங்கும் அதிகாரம் கூட்டரசு அரசியலமைப்பின் 42ஆவது பிரிவின்படி மாட்சிமை தங்கிய மாமன்னர் மற்றும் மன்னிப்பு வாரியத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் தெரிவித்தார்.

மன்னிப்பு மனுவை ஏற்கவோ நிராகரிக்கவோ உள்துறை அமைச்சகத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் சைஃபுடின் நசுத்தியோன் தெளிவுபடுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மலேசியாவில் பல பில்லியன் டாலர் முதலீடுகள்! வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிப்பு – துணை அமைச்சர் சியூ சூன் மான்

மலேசியாவில் பல பில்லியன் டாலர் முதலீடுகள்! வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிப்பு – துணை அமைச்சர் சியூ சூன் மான்

பாராங் வெட்டுத் தாக்குதலில் துண்டிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியின் கை மீண்டும் பொருத்தம்! எட்டு மணி நேர அறுவை சிகிச்சை வெற்றி

பாராங் வெட்டுத் தாக்குதலில் துண்டிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியின் கை மீண்டும் பொருத்தம்! எட்டு மணி நேர அறுவை சிகிச்சை வெற்றி

பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 130 மலேசியர்கள்! விசாரணைக்காக புக்கிட் அமான் போலீஸ் குழு விரைகிறது

பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 130 மலேசியர்கள்! விசாரணைக்காக புக்கிட் அமான் போலீஸ் குழு விரைகிறது

95 மில்லியன் ரிங்கிட் சாலைப் பராமரிப்புத் திட்டம்! 3 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக முன்னாள் ஜிஎல்சி ஊழியர் சந்தேகம்

95 மில்லியன் ரிங்கிட் சாலைப் பராமரிப்புத் திட்டம்! 3 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக முன்னாள் ஜிஎல்சி ஊழியர் சந்தேகம்

மாத வருமானம் 4,000 ரிங்கிட்டை எட்டினால் ஜி.எஸ்.டி. வரி குறித்து பரிசீலிக்கலாம் – பிரதமர் அன்வார்

மாத வருமானம் 4,000 ரிங்கிட்டை எட்டினால் ஜி.எஸ்.டி. வரி குறித்து பரிசீலிக்கலாம் – பிரதமர் அன்வார்

பாரிசான் நேஷனல் அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை – அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்

பாரிசான் நேஷனல் அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை – அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்