Nov 12, 2026
Thisaigal NewsYouTube

பாராங் வெட்டுத் தாக்குதலில் துண்டிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியின் கை மீண்டும் பொருத்தம்! எட்டு மணி நேர அறுவை சிகிச்சை வெற்றி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாராங் வெட்டுத் தாக்குதலில் துண்டிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியின் கை மீண்டும் பொருத்தம்! எட்டு மணி நேர அறுவை சிகிச்சை வெற்றி

கெப்போங்கில் வெளிநாட்டவர் ஒருவரின் பாராங் ஆயுதத் தாக்குதலில் வலது கை துண்டிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

26 வயதுடைய லான்ஸ் கோப்ரல் தியேரி ரோட்ஜேர் ஃபெண்டியின் துண்டிக்கப்பட்ட வலது கையை கோலாலம்பூர் மருத்துவமனை மருத்துவர்கள் எட்டு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பொருத்தியுள்ளனர்.

இந்தச் சிகிச்சையில் ஈடுபட்ட நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கு சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலும் மருத்துவமனைக்கு நேரில் சென்று போலீஸ்காரர் தியேரி ரோட்ஜேர் ஃபெண்டியின் உடல் நிலையைப் பார்வையிட்டார்.

டேசா அமான்பூரி, கெப்போங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நடந்த இத்தாக்குதலில், போலீஸ் அதிகாரி தலை மற்றும் உடலிலும் காயமடைந்தார்.

தாக்குதலைத் தொடர்ந்து தப்பியோடிய சந்தேக நபர், இரவு 8 மணியளவில் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, சுட்டு வீழ்த்தப்பட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மலேசியாவில் பல பில்லியன் டாலர் முதலீடுகள்! வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிப்பு – துணை அமைச்சர் சியூ சூன் மான்

மலேசியாவில் பல பில்லியன் டாலர் முதலீடுகள்! வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிப்பு – துணை அமைச்சர் சியூ சூன் மான்

பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 130 மலேசியர்கள்! விசாரணைக்காக புக்கிட் அமான் போலீஸ் குழு விரைகிறது

பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 130 மலேசியர்கள்! விசாரணைக்காக புக்கிட் அமான் போலீஸ் குழு விரைகிறது

95 மில்லியன் ரிங்கிட் சாலைப் பராமரிப்புத் திட்டம்! 3 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக முன்னாள் ஜிஎல்சி ஊழியர் சந்தேகம்

95 மில்லியன் ரிங்கிட் சாலைப் பராமரிப்புத் திட்டம்! 3 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக முன்னாள் ஜிஎல்சி ஊழியர் சந்தேகம்

நஜிப் வீட்டுக் காவலுக்கு கூடுதல் செலவு இல்லை – உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன்

நஜிப் வீட்டுக் காவலுக்கு கூடுதல் செலவு இல்லை – உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன்

மாத வருமானம் 4,000 ரிங்கிட்டை எட்டினால் ஜி.எஸ்.டி. வரி குறித்து பரிசீலிக்கலாம் – பிரதமர் அன்வார்

மாத வருமானம் 4,000 ரிங்கிட்டை எட்டினால் ஜி.எஸ்.டி. வரி குறித்து பரிசீலிக்கலாம் – பிரதமர் அன்வார்

பாரிசான் நேஷனல் அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை – அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்

பாரிசான் நேஷனல் அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை – அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்