Jun 17, 2026
Thisaigal NewsYouTube
பாஸ் கட்சியை எதிர்க்க வேண்டுமானால் பெர்சத்து கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்: அமர் அப்துல்லா
தற்போதைய செய்திகள்

பாஸ் கட்சியை எதிர்க்க வேண்டுமானால் பெர்சத்து கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்: அமர் அப்துல்லா

Share:

வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் பாஸ் கட்சிக்கு எதிராகப் போட்டியிட விரும்பினால், பெர்சத்து கட்சி பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று பாஸ் உதவித் தலைவர் அமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். தங்களுக்கு எதிராகப் போட்டியிட்டுக்கொண்டு அதே கூட்டணியில் நீடிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பாஸ் கட்சி தங்களுடனான உறவை முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து, அனைத்துத் தளங்களிலும் பாஸ் கட்சியை எதிர்க்க பெர்சத்து தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் முஹிதீன் யாசின் கூறியிருந்தார். மேலும், பிஎன் கூட்டணியை உருவாக்குவதில் பெர்சத்துவுக்கும் பங்கு இருப்பதால் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பிஎன் சின்னத்தையே பயன்படுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், முஹிதினின் இந்த முடிவு அவசரமானது என்றும், தேர்தல் சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு பிஎன் தலைவரின் கையெழுத்து தேவை என்ற விதிமுறை உள்ளதால், இது குறித்துக் கூட்டணியில் முதலில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அமர் அப்துல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இடப் பகிர்வு மற்றும் பிஎன் வசம் உள்ள மாநிலங்களில் பெர்சத்து கட்சியின் பொறுப்பாளர்கள் நிலை குறித்து விவாதிக்க பாஸ் கட்சி விரைவில் ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News