Sep 28, 2026
Thisaigal NewsYouTube
மரம் விழுந்து இளைஞர்  பலி: கோலாலம்பூர் மாநகர் மன்றம் 8.24 லட்சம் ரிங்கிட்  இழப்பீடு வழங்க உத்தரவு
தற்போதைய செய்திகள்

மரம் விழுந்து இளைஞர் பலி: கோலாலம்பூர் மாநகர் மன்றம் 8.24 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்தரவு

Share:

மரம் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்காக, அவரது பெற்றோருக்கு 8 லட்சத்து 24 ஆயிரத்து 180 ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL- க்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி, 30 வயதுடைய புன் முன் லேப் என்பவர் கோலாலம்பூர் ஜாலான் கூச்சிங் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரத்தில் இருந்த மரம் அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி மார்ச் 24-ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஃபாண்டி நஸிலா அப்துல்லா , மாநகர் மன்றத்தின் பராமரிப்புத் தவறு காரணமாகவே இந்த விபத்து நடந்ததாகத் தீர்ப்பளித்தார்.

அந்த இளைஞரின் இறுதிச்சடங்கு செலவுக்காக 26 ஆயிரத்து 180 ரிங்கிட்டும், பெற்றோரின் வாழ்வாதார இழப்பீடாக 7 லட்சத்து 68 ஆயிரிம் ரிங்கிட்டும், அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 30 ஆயிரம் ரிங்கிட்டும், மொத்தம் 8 லட்சத்து 24 ஆயிரத்து 180 ரிங்கிட்டை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாலையோர மரங்களைப் பராமரிப்பதும், கண்காணிப்பதும் மாநகர் மன்றத்தின் சட்டப்பூர்வக் கடமையாகும். ஆனால், அந்த மரம் முறையாகப் பராமரிக்கப்பட்டதற்கான எந்தவொரு ஆவணத்தையும் மாநகர் மன்றம், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. மாநகர் மன்றத்தின் இத்தகைய அலட்சியமே ஒரு உயிரைப் பறித்துள்ளது என்று நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்