Sep 28, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு கல்லறையில் ஒழுங்கீன செயல்: ஜோடிக்கு 3 நாள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

பினாங்கு கல்லறையில் ஒழுங்கீன செயல்: ஜோடிக்கு 3 நாள் தடுப்புக்காவல்

Share:

பினாங்கில் உள்ள கல்லறை ஒன்றில் நிர்வாணக் கோலத்தில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஜோடிக்கு எதிராக, போலீசார் மூன்று நாள் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளனர்.

இன்று காலை ஜார்ஜ்டவுன், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த ஜோடிக்கு, இன்று முதல் வரும் வியாழக்கிழமை வரை காவலில் வைத்து விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் நடரதுன் நைம் முகமது சைடி அனுமதி வழங்கினார்.

முன்னதாக, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விலங்கிடப்பட்ட நிலையில் அந்த ஜோடி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதனை உறுதிப்படுத்திய பினாங்க் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில், நேற்று ஜார்ஜ் டவுன் பகுதியில் வெவ்வேறு இடங்களில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

37 வயதுடைய பெண் நேற்று இரவு 8.35 மணியளவில் ஜாலான் பாடாங் தெம்பாக் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும், 58 வயதுடைய ஆண் இரவு 11.10 மணியளவில் சுங்கை ஆரா, பயான் லெப்பாஸ் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முன்பும் பிடிபட்டனர்.

அந்த இருவரும் கல்லறையில் தகாத உறவில் ஈடுபட்டுள்ளதை போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த மார்ச் 22-ஆம் தேதி பினாங்கு, ஆயர் ஈத்தாம் பகுதியில் உள்ள பத்து காந்தோங் சீன இடுகாட்டு கல்லறையில் நடந்தது தெரியவந்துள்ளது.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்