May 4, 2026
Thisaigal NewsYouTube
கடந்த மாதம் பணவீக்கம் 1.6% உயர்வு - மலேசியப் புள்ளியியல் துறை தகவல்
தற்போதைய செய்திகள்

கடந்த மாதம் பணவீக்கம் 1.6% உயர்வு - மலேசியப் புள்ளியியல் துறை தகவல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.19-

கடந்த ஜனவரி மாதத்தில் பணவீக்கம் 1.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதன் மூலம் பணவீக்கக் குறியீடு கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்த 133.6 புள்ளிகளிலிருந்து 135.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளதாக மலேசியப் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

தலைமைப் புள்ளியியல் நிபுணர் முஹமட் உஸிர் மஹிடின் விடுத்துள்ள அறிக்கையில், இந்த உயர்வுக்கு முக்கியமாக நான்கு பிரிவுகள் காரணமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனிநபர் பராமரிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு செலவினம் 6.6 விழுக்காடு உயர்ந்துள்ளது. கல்விச் செலவினம் 3.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. வீட்டு வசதி, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் இதர எரிபொருட்கள் செலவினம் 1.2 விழுக்காடு உயர்ந்துள்ளதாக உஸிர் மஹிடின் தெரிவித்துள்ளார்.

Related News