Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து வழித்தடங்களை பயன்படுத்தினால் அபராதம்
தற்போதைய செய்திகள்

பேருந்து வழித்தடங்களை பயன்படுத்தினால் அபராதம்

Share:

கோலாலம்பூர்,ஜன.9
பேருந்துகளுக்காக பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள சாலை வழித்தடங்களை தவறாக பயன்படுத்தும் வாகனமோட்டிகளுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படவிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

பொது போக்குவரத்து, குறிப்பாக பேருந்துகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக இந்நடவடிக்கையை போக்குவரத்து அமைச்சு மேற்கொள்ளவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் பிரதான பொது போக்குவரத்து சேவையை வழங்கி வரும் ப்ராசாரானா வெளியிட்டுடள்ள 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி நாள் ஒன்றுக்கு சராசரி 2 லட்சத்து 41 ஆயிரம் பேர் பொது போக்குவரத்தான பேருந்து சேவையை பயன்படுத்துகின்றனர்.

இந்த எண்ணிக்கையை இவ்வாண்டில் நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 85 ஆயிரம் பேராக உயர்த்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்