Jul 31, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பல்வேறு இனங்களை, மதங்களை உள்ளடக்கியுள்ளது

Share:

ஒற்றுமை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள மடானி கொள்கை, பல்லினத்தவர்களையும், பல்வேறு மதங்களையும், பிராந்தியங்களையும் உள்ளடக்கியுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மடானி அரசாங்கம், எந்தவொரு இனத்தின் புரிதலுக்கும், கருத்திற்கும் முரண்பட்டது இல்லை என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

இஸ்லாமிய போதனைகளுக்கு அதீத முன்னுரிமை வழங்கினாலும் அனைத்து சமயத்திவர்களின் நலன்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதாக மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழா கொண்ட்டாட்ட நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related News

பல்வேறு இனங்களை, மதங்களை உள்ளடக்கியுள்ளது | Thisaigal News