மலாக்கா, ஆகஸ்ட்.26-
ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் 7 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த இறுதியாண்டு மருத்துவ மாணவர் ஒருவர், கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 10.42 மணியளவில் மலாக்கா, ஜாலான் பேராக்கில் உள்ள ஒரு வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்தது. அந்த மாணவன் 7 ஆவது மாடியிலிருந்து 5 ஆவது மாடி கட்டமைப்புப் பகுதியில் விழுந்ததால் இரண்டு மாடி உயரத்தில் கடும் காயத்திற்கு ஆளாகியுள்ளார் என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.
சக நண்பர்களுடன் அந்த வீடமைப்புப் பகுதியில் தங்கியிருந்த அந்த மாணவன், காதில் யாரோ பேசுவது போல் இருந்ததைத் தொடர்ந்து நிர்வாணக் கோலத்திலேயே வீட்டிற்கு வெளியே ஓடி வந்து வெளியே குதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாணவன் ஜோகூர், மூவாரில் நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். எனினும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியதாக கிரிஸ்டப்பர் பாதிட் குறிப்பிட்டார்.








