Dec 4, 2025
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தப்பட்டார் சையிட் சாடிக்
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தப்பட்டார் சையிட் சாடிக்

Share:

ஒற்றுமை அரசாங்கத்திற்கு இதுநாள் வரை தாம் வழங்கி வந்த ஆதரவை மூவார் எம்.பி.யும், மூடா கட்சியின் தலைவருமான சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் மீட்டுக்கொண்டதைத் தொடர்ந்து இன்று சிறப்பு மக்களவைக்கூட்டத் தொடரில் அந்த இளம் எம்.பி. எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தப்பட்டுள்ளார்.

தம்முடைய நாடாளுமன்ற இருக்கையை எதிர்க்கட்சி வரிசைக்கு மாற்றும்படி சையிட் சாடிக் அ னுப்பி வைத்துள்ள கடிதத்தை அடிப்படையாக கொண்டு அவருக்கான இட அமர்வு, எதிர்க்கட்சி வரிசைக்கு மாற்றப்படுவதாக மக்களை சபா நாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தாம் வழங்கி வந்த ஆதரவை மீட்டுக்கொள்வதாக சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.

Related News