சுபாங் ஜெயா, நவம்பர்.01-
சிலாங்கூர், பண்டார் சன்வேயில் கடந்த வியாழக்கிழமை கல்லூரியொன்றின் அருகே ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட காவல் துறை தலைவர் அசிஸ்டன் கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார். காற்சட்டை மட்டுமே அணிந்த நிலையில் காணப்பட்ட அச்சடலம் யாருடையது என்பது குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
அச்சடலம் சவப் பரிசோதனைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.








