பெக்கான், ஜனவரி.10-
பகாங், பெக்கான் மாவட்டத்தில் உள்ள கோல பஹாங், பந்தாய் லேஜெண்டா கடற்கரையில் இன்று சனிக்கிழமை காலையில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் கடற்கரை பகுதியில் உலாவச் சென்ற பொதுமக்கள், மணலில் மனித எலும்புக்கூடு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெக்கான் மாவட்ட போலீசார், அந்த எலும்புக்கூட்டைக் கைப்பற்றினர். அது ஆணா அல்லது பெண்ணா? மற்றும் எவ்வளவு காலமாக அங்கு கிடந்தது என்பது குறித்த விவரங்கள் இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை.
கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு பரிசோதனைக்காகவும், டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளத்தைக் கண்டறியவும் பெக்கான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் ஸைடி மாட் ஸின் தெரிவித்தார்.








