கூச்சிங், செப்டம்பர்.02-
கடந்த மாதம் கூச்சிங்கில் இரண்டு பேரங்காடிகளில் நுழைந்து, திஸ்சு பாக்கெட்டுகளைத் தீயிட்டுக் கொளுத்திச் சேதத்தை விளைவித்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கார் கழுவும் பணியாளரான 33 வயது ரிஸாம் ஸாவாவி என்று அந்த நபர் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி, கோத்தா செந்தோசாவிலுள்ள பேரங்காடி ஒன்றுக்கும், பின்னர் ஆகஸ்ட் 21-ம் தேதி, பத்து காவாவில் உள்ள பேரங்காடி ஒன்றுக்கும் தீயிட்டுச் சேதத்தை விளைவித்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
திஸ்சு பாக்கெட்டுகளை எரிப்பதன் மூலம் பேரங்காடிப் பணியாளர்களின் கவனத்தைத் திசைத் திருப்பி, அங்கிருக்கும் பொருட்களைத் திருடிச் செல்வதை அந்த நபர் வாடிக்கையாகக் கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.








