சூராவ் ஒன்றின் கழிப்பறையில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு இருந்த சிசு ஒன்றின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது.
48 மணி நேரத்திற்கு முன்பு இறந்து இருக்கக்கூடும் என்று நம்பப்படும் அந்த சிசுவின் சடலத்தை கண்ட ஒரு மாதுவும் அவரின் தோழியும் இது குறித்து தகவல் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் சிசுவின் உடலை மீட்டனர்.
இன்று காலை 10.30 மணியளவில் திரெங்கானு, பேசுட், பெங்ஙாலான் ஞிரே என்ற இடத்தில் சிசுவின் உடல் கிடப்பதாக அவசரத் தகவல் கிடைக்கப்பெற்றதாக பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரசாக் முஹமாட் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட அந்த சிசுவின் உடல், தடயவியல் பரிசோதனைக்காக பெசுட் மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








