கோலாலம்பூர், அக்டோபர்.01-
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டிலுள்ள குடிநுழைவுச் சாவடிகளில் தானியங்கி வாயில்கள் நிறுவும் பணி தொடங்கும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
எல்லைக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவது, கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பது மற்றும் கள்ளக் குடியேறிகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக இந்த தானியங்கி முறை செயல்படும் என்றும் சைஃபுடின் உறுதியளித்துள்ளார்.
எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் மேற்பார்வையின் கீழ் தொடங்கும் இப்பணிகளின் மூலம், நாடெங்கிலும் சுமார் 123 சாவடிகளில் 635 தானியங்கி வாயில்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஒருமைப்பாடு மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள சைஃபுடின், உள்துறை அமைச்சு அவற்றில் எந்தவித சமரசமும் செய்யாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.








