Oct 10, 2026
Thisaigal NewsYouTube

மலேசியாவிற்கு விதிக்கப்பட்ட வரி விவகாரம் மீதான பேச்சுவார்த்தை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியாவிற்கு விதிக்கப்பட்ட வரி விவகாரம் மீதான பேச்சுவார்த்தை

கோலாலம்பூர், ஜூன்.19-

மலேசியாவிற்கு விதிக்கப்பட்டுள்ள வரி தொடர்பில் அமெரிக்காவுடனான மலேசியாவின் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள 24 விழுக்காடு வரியைக் குறைப்பது தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தையின் மையக் கருத்தாக உள்ளது.

அமெரிக்காவிற்கு மலேசியா ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களுக்குக் கூடுதல் வரி வகிதத்தை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த வரி விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ் மற்றும் இரண்டாவது நிதி அமைச்சர் அமிர் ஹம்ஸா அஸிஸான் தற்போது வாஷிங்டனில் உள்ளனர்.

அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹொவர்ட் லட்நிக்குடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகச் சுமூகமாகவும் அதே வேளையில் ஆக்கப்பூர்வமான விளைவுகளுக்கான அறிகுறிகளுடன் நடைபெற்றதாக தமக்கு தகவல் அனுப்பபட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →