Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கெடாவில் 3 இலட்சம் ரிங்கிட் கஞ்சா பறிமுதல்: தாய்லாந்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் கடத்தல் - 4 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

கெடாவில் 3 இலட்சம் ரிங்கிட் கஞ்சா பறிமுதல்: தாய்லாந்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் கடத்தல் - 4 பேர் கைது!

Share:

அலோர் ஸ்டார், ஆகஸ்ட்.03-

கெடா, புக்கிட் காயு ஹீத்தாம் எல்லையில், தாய்லாந்திலிருந்து மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்து கஞ்சா கடத்திய கும்பல் சிக்கியது. சுமார் 94 கிலோ எடையுள்ள, 3 இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள கஞ்சாவைக் கடத்த முயன்ற நான்கு பேர், ஜூலை 30 முதல் நேற்று வரை நடந்த அதிரடிச் சோதனைகளில் கைது செய்யப்பட்டதாக கெடா மாநிலக் காவல் துறைத் தலைவர் அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.

இந்தக் கும்பல், தாய்லாந்தின் டானோக்கில் இருந்து செயல்பட்டு, கஞ்சாவை புக்கிட் காயு ஹீத்தாம் வழியாக மலேசியாவுக்குள் கொண்டு வந்து, பண்ணைகளில் பதுக்கி வைத்து விநியோகித்து வந்துள்ளது என அட்ஸ்லி மேலும் குறிப்பிட்டார்.

Related News