Oct 5, 2026
Thisaigal NewsYouTube

கேபிள் திருட்டுக்கு கடும் தண்டனை — சட்டத்திருத்தம் பரிசீலனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேபிள் திருட்டுக்கு கடும் தண்டனை — சட்டத்திருத்தம் பரிசீலனை

எல்ஆர்டி, எம்ஆர்டி ரயில் சேவைகளில் கேபிள் திருட்டால் அடிக்கடி இடையூறு ஏற்படுவதால், கேபிள் திருட்டில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்க சட்டங்களைத் திருத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் இன்று நாடாளுமன்ற்ததில் தெரிவித்தார்.

இந்த விவகாரம் அமைச்சரவையால் தீவிரமாகக் கருதப்படுவதாகவும், உள்துறை அமைச்சின் மூலம் சட்டத்திருத்தம் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

திருடப்பட்ட கேபிள்களை வாங்குவதும் குற்றம் என எச்சரித்த ஙா கோர் மிங், அவ்வாறு செய்பவர்களும் உரிய தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றார். எம்ஆர்டி புத்ராஜெயா வழித்தடத்தில் நேற்று ஏற்பட்ட மின்தடை கேபிள் திருட்டால் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →