Sep 11, 2026
Thisaigal NewsYouTube
மலேசியர்களைக் குறிவைத்து இணைய மோசடி – இந்தோனேசியாவில் 30 மலேசியர்கள் கைது
தற்போதைய செய்திகள்

மலேசியர்களைக் குறிவைத்து இணைய மோசடி – இந்தோனேசியாவில் 30 மலேசியர்கள் கைது

Share:

சக மலேசியர்களைக் குறிவைத்து இணைய மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 30 மலேசியர்கள், இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் மாநிலம் பொந்தியானாக் நகரில் உள்ள விடுதி ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் தைவான் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

22 ஆண்கள், 8 பெண்கள் அடங்கிய இந்தக் குழுவானது, விடுதியில் உள்ள 14 அறைகளை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 31 பேரும் விசாரணைக்காக குடிநுழைவு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் விசா காலத்தைத் தாண்டி தங்கியிருந்ததும், மற்றவர்கள் தங்கும் அனுமதி விதிகளை மீறியதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் பல்வேறு சட்டவிரோத வழிகள் மூலம் இந்தோனேசியாவுக்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை தொடர்ந்து நடைபெறும் நிலையில், மலேசிய அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

கிள்ளானில் நகை விநியோக ஊழியரிடம் 1.5 லட்சம் மதிப்புள்ள 70 தங்கக் கட்டிகள் கொள்ளை

கிள்ளானில் நகை விநியோக ஊழியரிடம் 1.5 லட்சம் மதிப்புள்ள 70 தங்கக் கட்டிகள் கொள்ளை

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி புறப்பட்டார் பிரதமர் அன்வார்: கேரளா மற்றும் மாலத்தீவில் முக்கியத் தலைவர்களைச் சந்திக்கிறார்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி புறப்பட்டார் பிரதமர் அன்வார்: கேரளா மற்றும் மாலத்தீவில் முக்கியத் தலைவர்களைச் சந்திக்கிறார்

ஈப்போ செல்லும் நெடுஞ்சாலையில் மண் சரிவு — 15 கி.மீ. தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல்

ஈப்போ செல்லும் நெடுஞ்சாலையில் மண் சரிவு — 15 கி.மீ. தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல்

மவுண்ட் ஜாசார் மலையிலிருந்து தவறி விழுந்து ஜெர்மன் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

மவுண்ட் ஜாசார் மலையிலிருந்து தவறி விழுந்து ஜெர்மன் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

லெங்கோங் பள்ளியில் 159 பேருக்கு உடல்நலக்குறைவு -  உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாக டத்தோ சிவநேசன் தகவல்

லெங்கோங் பள்ளியில் 159 பேருக்கு உடல்நலக்குறைவு - உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாக டத்தோ சிவநேசன் தகவல்

திடீர் வெள்ளப் பெருக்கு: அனைத்து விலங்குகளும் பாதுகாப்பாக உள்ளதாக ஸூ நெகாரா அறிவிப்பு

திடீர் வெள்ளப் பெருக்கு: அனைத்து விலங்குகளும் பாதுகாப்பாக உள்ளதாக ஸூ நெகாரா அறிவிப்பு