தனது மனைவியுடன் மவுண்ட் ஜாசார் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 58 வயது ஜெர்மன் சுற்றுலாப் பயணியான ஜோர்க் ஹபெல்புஸ்க் மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
இன்று காலை 11.30 மணியளவில், 57 வயதான தனது மனைவி மரினா டேனேவுடன் அவர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இந்நிலையில் மதியம் 12.04 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து கேமரன் மலை தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 16 வீரர்கள் மீட்புப் பணிக்கு அனுப்பப்பட்டனர்.
மலை உச்சிக்கு அருகே உள்ள செங்குத்தான பாதையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பயணித்த மீட்புப் படையினர், அங்கிருந்த பள்ளத்தாக்கில் அவர் விழுந்து கிடந்ததைக் கண்டறிந்தனர்.
அப்போது அவர் சுயநினைவிழந்து காணப்பட்ட நிலையில், மருத்துவ அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.








