மலேசியாவின் அனைத்து 50 காசு நாணயங்களும் வெறும் 50 காசு மதிப்பு கொண்டவை அல்ல; சில நாணயங்கள் ஆயிரக்கணக்கான ரிங்கிட் வரை ஏலம் போகின்றன. குறிப்பாக, 1967, 1968 மற்றும் 1969-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சில 50 காசு நாணயங்கள் அரிய வகை சேகரிப்பாகக் கருதப்படுகின்றன.
சாதாரணமாக இந்த நாணயங்கள் பாதுகாப்பு விளிம்புடன் இருக்கும். ஆனால், தவறுதலாகப் 'பல் விளிம்புடன்' வெளியான சில நாணயங்கள் இன்று 5000 ரிங்கிட் வரை மதிப்பு பெற்றுள்ளன.
நாணயத்தின் வடிவம், அது அச்சிடப்பட்ட ஆண்டு, அதன் தற்போதைய தரம் மற்றும் அச்சிடும்போது ஏற்பட்ட பிழைகள் ஆகியவையே அதன் விலையைத் தீர்மானிக்கின்றன. இருப்பினும், சாதாரண புழக்கத்தில் உள்ள பெரும்பாலான 50 காசு நாணயங்கள் அதன் முக மதிப்பான 50 காசையே கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.








