Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல்  சட்டத்தை மீறாதீர்கள்
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல் சட்டத்தை மீறாதீர்கள்

Share:

புத்ராஜெயா,ஜன.10
டிஏபி புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், பேரா மாநில டிஏபி ஆலோசருமான டத்தோ ஙெ கூ ஹாம் வீட்டில் இன்று காலையில் நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து எந்தவொரு தரப்பினரும் சட்டத்தை மீற வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடீன் நசுத்தியோன்
இஸ்மாயில் நினைவுறுத்தினார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பானர்வர்களை அடையாளம் காண்பதற்கு அரச மலேசிய போலீஸ் படை விரிவான புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள், கடும் தண்டனைக்கு வழிவகுக்கும் என்பதை மலேசியர்கள் உணர வேண்டும் என்று அமைச்சர் சைபுதீன் நினைவுறுத்தினார்.

எந்தவொரு தரப்பும் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள முயற்சித்தால் அதற்குரிய தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.

இன்று அதிகாலையில் பேரா, மஞ்சோங், ஆயர் தாவாரில் உள்ள ஙெ கூ ஹாம் வீட்டில் நடத்தப்பட்ட பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதலில் அவரும், அவரின் மனைவியும் உயிர் தப்பியுள்ள வேளையில் மூன்று கார்கள் சேதமுற்றன..
ஷரியா சட்ட நடவடிக்கைக்குழுவில் முஸ்லிம் அல்லாதவர்களும் இடம் பெற வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை தாம் வெளியிட்டதன் காரணமாக இந்த தாக்குதல் நடந்து இருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஙெ கூ ஹாம் தெரிவித்து இருந்தார்.

எனினும் அந்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு தாம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்