கிள்ளான், ஜூலை.27-
தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளை முன் மாதிரியாகக் கொண்டு இனி பருவ காலப் பழங்களை ஆண்டு முழுவதும் நாட்டில் உற்பத்தி செய்ய ஆராய்ச்சியையும் மேம்பாட்டுப் பணிகளையும் தீவிரப்படுத்த மலேசிய வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டுப் பழங்களையும் காய்கறிகளையும் ஊக்குவிக்கும் வகையில், அரசு விழாக்கள் அனைத்திலும் உள்ளூர்ப் பழங்கள் மட்டுமே பரிமாறப்பட வேண்டும் என அரசாங்கம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மார்டியின் தரமான டுரியான் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்றார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் சாபு. இஃது உள்நாட்டு விவசாயிகளுக்குப் பெரும் ஆதரவை வழங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.








