புத்ராஜெயா, பிப்ரவரி.19-
ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பிற்காக மட்டுமல்ல, ஒருவர் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவும், தார்மீகச் சிந்தனைகளை வலுப்படுத்தவும், சிறந்த தேசத்தைக் கட்டியெழுப்புதற்கான பொறுப்புகளை ஏற்பதற்கும் சிறந்த வாய்ப்பாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கற்றல், பிரதிபலிப்பு மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கான நேரம் என்றும் அன்வார் ரமலான் மாதத்தை விவரித்துள்ளார்.
அதே வேளையில், புனித ரமலான் மாதமானது, முஸ்லிம்களுக்கு அவர்களின் பலவீனங்களை மறுபரிசீலனை செய்து, நம்பிக்கையையும் துளிரச் செய்யவும், குண நலம், பணி செயல்திறன், அர்ப்பணிப்பு மற்றும் தனிப்பட்ட ஒழுக்கத்தில், முன்னேற்றத்தை ஏற்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நமது iman (நம்பிக்கை), akhlak (ஒழுக்கம்) மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றில் நமது வளர்ச்சியை அளவிடுவதற்கும், நமது அன்றாடப் பொறுப்புகளை நாம் எவ்வாறு நிறைவேற்றுகிறோம் என்பதை அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு என்றும் இன்று வியாழக்கிழமை உள்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இஹ்யா ரமலான் நிகழ்வில் பங்கேற்ற அன்வார் விளக்கமளித்தார்.








