கோலாலம்பூர், டிசம்பர்.27-
கோலாலம்பூர், செந்தூல், ஜாலான் டத்தோ செனு, ஃபிளாட் செந்தூல் உத்தமா அடுக்குமாடி வீட்டில் நேற்று வெள்ளிக்கிழமை தாயும், மகனும் தீயில் கருகி மாண்ட சம்பவத்தில் குற்றத்தன்மைக்கான அம்சங்கள் கண்டறியப்படவில்லை என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் சுகார்னோ முஹமட் ஸாஹாரி தெரிவித்தார்.
82 வயது மூதாட்டியும், அவரது 58 வயது மகனும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவர்களின் உடலில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் சோதனையில் இவ்விவகாரம் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதிகாலையில் வீட்டின் நாலாபுறமும் தீ சூழ்ந்து கொண்டு, கொழுந்து விட்டு எரிந்த நிலையில் தாயும் மகனும் தப்பிக்க வழியில்லாமல் கருகி மாண்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.








