முன்மொழியப்பட்ட முற்போக்கான சம்பளக் கொள்கை, நல்ல முறையில் ஒருங்கிணைக்கவும், அதன் படிப்படியான அமலாக்கத்திற்கு தேவையான நிதி குறித்து ஆய்வு செய்யவும் அந்த பரிந்துரை அமைச்சரவைக்கு கொண்டு வரப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரவித்துள்ளார்.
நாட்டின் நிதி நிலை மற்றும் கொள்கைத் தேவைகளுக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இன்று நடைபெற்ற என்.இ.எ.சி எனப்படும் தேசிய பொருளாதார நடவடிக்கைக் குழு கூட்டத்தில், சம்பள முறை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு, அதனை சம அளவில் விநியோகிக்கும் வகையில், வேலைப்புச் சந்தை மீட்சியை நோக்கிய ஒரு மாற்றம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.
மக்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கவும், தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தை நிறைவேற்றவும், மலேசியத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவுச் சுமையை குறைக்கவும் வேலைவாய்ப்புச் சந்தை சீர்திருத்தங்களில் ஒன்றாக இந்த சம்பளக் கொள்கை இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு


