பினாங்கு, ஆயேர் இத்தாம் பகுதியில் மின்சாரக் கம்பிகள் திருட்டு தொடர்பில் சந்தேகிக்கப்படும் சிலரை காவல் துறௌ தீவிரமாத் தேடி வருகிறது.
இது குறித்து தகவல் அளித்த திமூர் லாவுட் மாவட்டக் காவல் துறையின் இடைக்காலத் தலைவர் சுப்ரிதென்டன் வி சரவணன் குறிப்பிடுகயில், பண்டார் பாரு காவல் நிலையத்தில் இத்திருட்டு குறித்து சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனத்தின் அதிகாரிகள் புகார் அளித்திருப்பதாகத் தெரிவித்தார் .
நேற்று இரவு 8.30 மணி அளவிம் சோதனை நடவடிக்கையை அந்நிறுவனத்தினர் மேற்கொள்ளும்போது சில மின்சாரக் கம்பிகள் காணாமல் போயிருந்ததை அவர்கள் அப்புகாரில் கூறி இருந்தனர்.
இந்தத் திருட்டுச் சம்பவத்தால் அந்நிறுவனத்திற்கு 15 ஆயிரம் வெள்ளி நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வருகையை உணர்ந்த அந்தத் திருட்டுப் பேர்வழிகள் வெட்டியெடுத்த சில கம்பிகளை சாலை ஓரத்திலேயே போட்டுவிட்டு வெள்ளை நிற புரோத்தோன் வீரா, மஞ்சள் நிற ஹோன்டா ஏக்கோட் என இரு வேறு கார்களில் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்த காணொலி ஒன்று வெளிவந்துள்ள நிலையில் பொது மக்கள் அதனைப் பகிர வேண்டாம் என சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.








