சிரம்பான், செப்டம்பர்.12-
ஊடுருவப்பட்ட டச் அண்ட் கோ அட்டையைப் பயன்படுத்தி, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக டோல் கட்டணம் செலுத்தாமலேயே இலவசப் பயணம் மேற்கொண்டு வந்ததாக நம்பப்படும் ஒரு தம்பதியரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
உள்ளூரைச் சேர்ந்த ஆடவரும், சீன நாட்டுப் பிரஜையான அவரின் மனைவியும் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
சில டோல் சாவடிகளில் வசூல் பணம், டோல் சாவடியைக் கடந்த வாகனங்களின் எண்ணிக்கைக்கு நிகராக இல்லாதது குறித்து கண்டறியப்பட்டதை தொடர்ந்து இது குறித்து டச் அண்ட் கோ நிறுவனம் செய்து கொண்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் அந்தத் தம்பதியர் பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் பயன்படுத்திய டச் அண்ட் கோ அட்டை அசலானதாகும். ஆனால் அந்த அட்டை ஒவ்வொன்றும் 150 ரிங்கில் முதல் 200 ரிங்கிட் வரை விற்பனை செய்யப்படுவதற்கு முன்னதாக ஒவ்வோர் அட்டையிலும் 300 ரிங்கிட் மதிப்பில் ஊடுருவல் நடந்துள்ளதாக அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.








