Sep 15, 2026
Thisaigal NewsYouTube
மாரா கல்வி நிறுவனத்தில் 8 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை - ஊழியர் உடனடி இடைநீக்கம்
தற்போதைய செய்திகள்

மாரா கல்வி நிறுவனத்தில் 8 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை - ஊழியர் உடனடி இடைநீக்கம்

Share:

மாஜ்லிஸ் அமானா ரக்யாட் எனப்படும் மாரா கல்வி நிறுவனத்தில் குறைந்தது 8 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர் ஒருவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அதன் தலைவர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி வெளியிட்டுள்ள தகவலில், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை தடையின்றி நடைபெறுவதற்காக ஊழியர் உடனடி இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர்கள் சிலர், தமக்கு நேரடியாக குறுஞ்செய்திகள் அனுப்பியதன் மூலம் இந்த விவகாரம் தெரிய வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, மாரா நிர்வாகத்துக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், இது குற்றவியல் விவகாரம் என்பதால், போலீசில் புகார் அளிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தியதாகவும் அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்