முன்னாள் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினரும், தாபோங் ஹாஜி வாரியத் தலைவருமான அப்துல் அஸீஸ் அப்துல் ரஹிம் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை அவரது மகன் கைருல் அஸ்மான் மறுத்துள்ளார்.
தனது தந்தை நேற்று இரவு எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல என்றும், அவர் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் கைருல் அஸ்மான் இன்று தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தாபோங் ஹாஜி அரச விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில், தனது தந்தையிடம் ஏதேனும் விசாரணை நடத்தப்பட்டால், அது முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கடந்த ஜூலை 29-ஆம் தேதி வெளியிடப்பட்ட தாபோங் ஹாஜி அரச விசாரணை ஆணைய அறிக்கை தொடர்பில் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக அப்துல் அஸீஸ் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
அதேவேளையில், கடந்த செவ்வாய்க்கிழமை, தாபோங் ஹாஜி அறிக்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்பு அமர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.








